உலக செய்திகள்
- மிகவும் ஆபத்தான 11 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
- அமெரிக்காவில் இசைத் துறையில் வழங்கப்படும் உயரிய கிராமி விருதுகள் அளிக்கப்பட்டன. இதில் அமெரிக்க பாப் இசைபாடகர் புருனோ மார்ஸ் 6 கிராமிய விருதுகளைத் தட்டிச் சென்றார்.
- அமெரிக்கா மீது ஒருசில மாதங்களில் அணு ஆயுத தாக்குதலை வடகொரியா நடத்தக் கூடும் என அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. இயக்குநர் Mike Pompeo கவலை தெரிவித்துள்ளார்.
- எகிப்து பாலைவனப் பகுதிகளில் ஒரு பேருந்தின் அளவிலான புதிய டைனோசர் ஒன்றின் படிமங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- பொலிவியாவில் உள்ள கேபிள் கார் சேவை உலகின் மிக நீண்ட தூர சேவையாக கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
- பிரான்சில் பெண்களை கேலி செய்தால் € 350(ரூ.27ஆயிரம்) அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டது
- ஓமனில் அடுத்த 6 மாதத்திற்கு ஊடகம், ஐடி, மார்கெட்டிங், இன்சூரன்ஸ் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற 10 துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது
- சீனா, உலகின் மிக உயரமான கட்டிடத்தை மலேசியாவில் கட்டி வருகிறது. இதன் உயரம் 492 மீட்டர் உயரமாகும். இக்கட்டிடத்திற்கு ‘சிக்னேச்சர் டவர்’ என பெயரிடப்பட்டுள்ளது
- இசைக்கேற்ப மாறும் வண்ண விளக்குகளால் ஆக்லாந்து துறைமுகப் பாலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே முழுக்க, முழுக்க சூரிய சக்தியால் ஒளி வீசும் பாலம் என அறியப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
- தமிழகத்தின் ஊரக உள்ளாட்சிகளின் நிதித் தேவை தன்னிறைவு பெற அமைச்சர் வேலுமணி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.
- ஆண்கள் முழங்காலுக்கு மேல் ஆடை அணிந்து கால்பந்து விளையாடுவதை முஸ்லிம் பெண்கள் பார்ப்பது, மதத்துக்கு விரோதமானது. அவ்வாறு பார்க்கக்கூடாது என்று தரூல் உலூம் மதகுரு ஆணையிட்டுள்ளார்.
- உத்தரபிரதேசத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 6 ஆயிரம் சூரிய மின்சக்தி (சோலார்) நிலையங்கள் அமைக்கப்படும் என்று அம்மாநில கூடுதல் மின்சார வளங்கள் துறை அமைச்சர் விர்ஜேஸ் பதக் தெரிவித்தார்.
- உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஊதியம் 200 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
- இந்தியாவில் வாழும் நடுத்தர வயதினரும், ஏழைகளும் 6 சதவீத அளவுக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
- உத்திரப்பிரதேசத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 6 ஆயிரம் சூரிய மின்சக்தி(சோலார்) நிலையங்கள் அமைக்கப்படும் என்று அம்மாநில கூடுதல் மின்சார வளங்கள் துறை அமைச்சர் ‘விர்ஜேஸ் பதக்’ தெரிவித்துள்ளார்
வர்த்தக செய்திகள்
- பொருளாதார வளமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 6 ஆவது இடத்தில் இருப்பதாக நியூ வோர்ல்ட் வெல்த் (New World Wealth) அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- தனியார் நிறுவனங்களில் செக்யூரிட்டி (இரவுநேர காவல்) வேலை செய்து கொண்டே கிரிக்கெட் விளையாடி, ஐபிஎல் அணிக்கு தேர்வாகியுள்ளார் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மன்சூர் தார்.
- சென்னையில் நடைபெற்ற மெக்பரன் கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து தொடரில் பெங்களூரு அணி 1-0 என்ற கணக்கில் கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது
- இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ‘தலிமரன் ஆவின்’ 100வது பிறந்த நாளையொட்டி அவரது உருவம் பொறித்த தபால் தலையை அஸ்ஸாம் மாநில ஆளுநர் ‘ஜெகதீஷ் முகி’ வெளியிட்டார்
- சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் 47வது இடத்தில் உள்ளார்
- தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய அணி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கி செய்திகள்
- கிரிப்டோகரன்ஸி எனப்படும் மெய்நிகர் பணம் வழங்குவதாக விளம்பரம் செய்த நிறுவனத்தின் இ-மெயில் தகவல்களை 'ஹேக்' செய்த கொள்ளையர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- அமெரிக்க ராணுவ வீரர்கள் பயிற்சியின் போது மின்னணு கண்காணிப்பு கருவி Strava என்ற மொபைல் செயலியை பயன்படுத்துவதை ஒழுங்குமுறைப் படுத்துவது குறித்து பெண்டகன் ஆய்வு செய்து வருகிறது.