உலக செய்திகள்
- மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்தில் மாற்றம் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
- லண்டனில் குளிர்கால விளக்குத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.
- 18 வயதுக்கு மேற்பட்டோர் பாஸ்போர்ட் பெற ஆதார் எண் கட்டாயம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
- ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக ஆளில்லா விமானம் மூலம் 2 இளைனர்கள் மீட்கப்பட்டனர்.
- சிறுபான்மையினர் நல அமைச்சர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் லக்னோவில் நடைபெற்றது
தேசிய செய்திகள்
- விமானப் பயணத்தின் போது மொபைல் மற்றும் இணையதள சேவையை அனுமதிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பரிந்துரைத்துள்ளது.
- புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தைத் தொடங்கி வைத்தார்.
- பெற்றோர் யாரெனத் தெரியாத அனாதைகளுக்கு அரசு வேலையில் ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்க மகாராஷ்ட்டிர மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
- ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் ஈரோடு உள்ளிட்ட மேலும் 9 புதிய நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஸ்மார்ட் நகரங்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.
- மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிடக் கோரி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங்-கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
வர்த்தக செய்திகள்
- நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட சுமார் 22 ஆயிரத்து 834 கார்களை திரும்பப் பெறப்போவதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- டாக்டர் மகாலிங்கம் சுழற்கோப்பைக்கான 10வது ஓபன் இன்டர்நேஷனல் செஸ் போட்டி சென்னையில் தொடங்கியது
- உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட் போட்டி சுவிட்சர்லாந்தில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது
- பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ‘ஹசன் அலி’ ஐசிசியின் 2017ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- எட்டுவகையான புற்றுநோய்களை அவை பரவுவதற்கு முன்னரே கண்டறியும் கேன்சர் செக் எனப்படும் புதுவகை ரத்தச் சோதனை முறையை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- விண்வெளிக்கு எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான அணுமின் உற்பத்தி கலன் சோதனை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளதாக நாசா(NASA) தெரிவித்துள்ளது.
- 2002 AJ129 என்று பெயரிடப்பட்டுள்ள மிகப்பெரிய விண்கல் ஒன்று வரும் பிப்ரவரி 4ம் தேதி பூமிக்கு மிக அருகாமையில் வர உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
- அதிக வெப்பமிக்க 3 ஆண்டுகளில் ஒன்றாகக் கடந்த 2017ஆம் ஆண்டு இருந்ததாக உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒப்பந்தங்கள்
- ஏர்பஸ் விமானத் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ஏ380வகையில் இருபது விமானங்களை வாங்குவதற்கு எமிரேட்ஸ் விமானப் போக்குவரத்து நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
நியமனங்கள்
- ரோமானியாவின் புதிய பிரதமராக ‘வியோரிக்கா தான்சில்லா’ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ரோமானியாவின் முதல் பெண் பிரதமராவார்
- சீக்கிய மதத்தை சேர்ந்த குர்பீர் எஸ் கிரேவால் முதல் முறையாக அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்
- புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அடுத்த வாரம் பொறுப்பேற்கவுள்ளார். இவர் 22வது தலைமை தேர்தல் ஆணையராவர்.
இரங்கல்
- கன்னட நடிகரும் இயக்குனருமான காசி நாத் காலமானார்.