உலக செய்திகள்
- ஆஸ்திரேலியாவை சேர்ந்த விக்கிலீக்ஸ் நிறுவனதின் அதிபர் ஜுலியன் அசேஞ்சேவிற்கு ஈக்வடார் நாடு குடியுரிமை அளித்துள்ளது
- சவுதி அரேபியாவில் பெண்கள் டாக்ஸி ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த மாதம் முதல் தான் இந்நாடு பெண்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி அளித்தது.
- சர்வதேச அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவளித்துள்ளது.
- சான்பிரான்சிஸ்கோ கோர்ட்டு சட்ட விரோதமா சிறு வயதில் அமெரிக்காவில் குடியேறியவர்களை வெளியேற்றும் ட்ரம்ப்-இன் உத்தரவிற்கு தடை விதித்துள்ளது.
- உலகில் சிறந்த தலைவர்கள் பட்டியலை கோல்ப் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் மோடி 3-ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
- சவுதிஅரேபியாவில் முதன்முறையாக கால்பந்து போட்டியினை பார்வையிட பெண்கள் மைதானத்தில் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
- பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கம் இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை வழங்க மத்திய அரசு பரிசீலனை
- தூய்மையான இரயில் நிலையங்களின் பட்டியலில் கேரளாவை சேர்ந்த கோழிக்கோடு இரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது. டெல்லி நிஜாமுதீன் இரயில் நிலையம் கடைசி இடத்தில் உள்ளது.
- உலகின் மிகவும் பரப்பரப்பான விமான வழித்தடங்களின் பட்டியலில், மும்பை – டெல்லி இடையிலான வழித்தடம் 3வது இடத்தை பிடித்துள்ளது. தென் கொரியா-வில் உள்ள சியோல் ஜிம்போ – ஜெஜு வழித்தடம் முதலிடத்திலும், ஆஸ்திரேலியவை சேர்ந்த மெல்போர்ன் - சிட்னி வழித்தடம் 2வது இடத்திலும் உள்ளது.
- இந்தியா மற்றும் ஜப்பான் கடலோர காவல்படையின் கூட்டுப் பயிற்சி ‘சாரெக்ஸ் - 18’ இந்தியாவில் நடைபெற உள்ளது.
- கோவா அரசு சுற்று சூழல் மாசுபாட்டை குறைக்கும் விதமாக பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு சாலை வரியை ரத்துசெய்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் தொடங்கியது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்கான தரவரிசையில் நடால் முதலிடமும், பெடரர் 2வது இடத்திலும் உள்ளனர். பெண்கள் பிரிவில் முகுருசா முதல் இடத்தில் உள்ளார்.
- இந்திய அணி பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை கைப்பற்றியது.
வர்த்தக செய்திகள்
- வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்க முடியாது என ஈரான் உறுதி பட தெரிவித்துள்ளது.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
- தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சரிதாதேவி 60கிலோ பிரிவிலும் , சோனியா 57கிலோ பிரிவிலும், சர்ஜுபாலா தேவி 48கிலோ பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்றனர்
- அமெரிக்காவை சேர்ந்த ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகில் நேர்மையான நகரங்களின் பட்டியலில் பின்லாந்தை சேர்ந்த ஹெல்சின்கி நகர் முதலிடத்தில் உள்ளது மற்றும் இந்தியாவில் உள்ள மும்பை இரண்டம் இடத்தை பிடித்துள்ளது.
நியமனங்கள்
- தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் விரிவுரைப்பாளராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த கஸ்தூரி நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் முதல் பெண் விரிவுரைப்பளர் ஆவர்.