உலக செய்திகள்
- ஆசியான் நாடுகள் பங்குபெறும் 2018ஆன ஆசியான் மாநாடு ஜனவரி 25ஆம் நாள் நடைபெற உள்ளது.
- தென் கொரியாவில் வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு வட கொரியா தனது பிரதிநிதிகளை அனுப்பவுள்ளது.
- சிரியா போர் விமானம் மற்றும் தரையில் இருந்து தரையை தாக்கும் ஏவுகணைகள் கொண்டு நேற்று இஸ்ரேல்-ஐ தாக்கியது.
- அமெரிக்காவில் வசிக்கும் சுமார் 200,000 எல் சல்வடோர் நாட்டவர்களின் குடியிருப்பு மற்றும் தொழில் புரியும் அனுமதியை ரத்துச் செய்ய டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
- பாரிஸில் 65 வயதுக்கு மேற்பட்ட € 2,200 க்கும் குறைவான வருமானம் பெறும் முதியவர்கள் இனி டிராம், மெட்ரோ, பேருந்து, RER ரயில்களில் இலவசமாக பயணம் செய்யும் விதமாக அவர்களுக்கு நாவிகோ பாஸ் அளிக்கப்படவுள்ளது.
தேசிய செய்திகள்
- பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கம் இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்வதாக கூறியுள்ளது.
- பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியா தன்னுடைய பணியை செய்ய அமெரிக்காவை எதிர்பார்க்க கூடாது என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறிஉள்ளார்.
- இந்தியாவைச் சேர்ந்த ‘ரகுநந்தன் யண்டாமுரி’ என்ற மென்பொறியாளருக்கு அமெரிக்க அரசு மரண தண்டனை விதித்துள்ளது. இவர் அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்படும் முதல் இந்தியர்
- பொள்ளாச்சியில் சர்வதேச அளவிலான பலூன் திருவிழா தொடங்கியது
வர்த்தக செய்திகள்
- மத்திய அமைச்சரவை ஏர் இந்தியா நிறுவனத்தில் அந்நிய விமான நிறுவனங்களின் முதலீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- இளைஞர்களுக்கான 20வது தேசிய இளையோர் கைப்பந்து போட்டியில் தமிழக அணி ஆண்கள் பிரிவில் வெள்ளி மற்றும் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது
- முன்னாள் வீரர் ‘ராகுல் டிராவிட்’ கிரிக்கெட் வாழ்க்கை ‘காமிக் புத்தகம்’என்ற தலைப்பில் வெளிவரவுள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- 31 செயற்கைகோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி40 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
- இந்தியாவின் 100-வது செயற்கைகோளான கார்ட்டோ சாட்-2 வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தபட்டது .
நியமனங்கள்
- இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் நிர்வாக கவுன்சிலின் (பிஎஃப்ஐ), பெண் வீராங்கனைகளுக்கான பிரதிநிதியாக சரிதா தேவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.