உலக செய்திகள்
1.
உலக பொருளாதார அமைப்பின் மாநாடு(2018) – டாவேசில்(சுவிட்சர்லாந்து) நடைபெற உள்ளது
2.
பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவான சம்பளம் கொடுத்தால் தண்டனை வழங்கப்படும் என்ற பாலின சமநிலைக்கான புதிய சட்டத்தை ஐஸ்லாந்து இயற்றியுள்ளது
3.
பிரான்சில், வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்படுத்துவோரின் லைசன்ஸை தற்காலிகமாக ரத்து செய்யும் சட்டம் விரைவில் அமல்படுத்தப்பட
உள்ளது
4.
பெண்கள் மட்டுமே பணியாற்றும் மட்டுங்கா(மகாராஷ்டிரா)
இரயில் நிலையம் ‘லிம்கா 2018’ உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது
5.
சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் பர்தா அணிவதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
தேசிய செய்திகள்
6.
அழிந்து வரும் கழுகுகளை பாதுகாப்பதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது
7.
பயிற்றுவித்தல் தொடர்பில்லா பணிகளில்(தேர்தல் பணி, ஆதார் பணி) ஆசிரியர்களை பயன்படுத்துவதை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது
8.
தேசிய அளவிலான ‘கலா உத்சவ்’ போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனைப் படைத்துள்ளனர். இசைப் பிரிவில் தேசிய அளவில் தமிழகத்திற்கு
2வது பரிசு கிடைத்துள்ளது
9.
திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை
என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
10. வரலாற்று ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகளை
ராஜஸ்தான் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாளொன்றுக்கு 10000 பக்கங்கள் டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்யப்பட்டு
பதிவேற்றப்படுகிறது
11. நாட்டில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள 115 மாவட்டங்களில் ‘டிரான்ஸ் பார்மிங்க் இண்டியா’ என்ற பெயரில் புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது
12. குடியரசு தினந்தன்று பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்ட தேசிய கொடிகளை யாரும் பயன்படுத்தக்
கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது
13. இந்தியாவில் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் பிரதியூஷ்(சூரியன்) புனேவில் உள்ள ஐஐடிஎம் வளாகத்தில் நிறுவப்பட்டது. இதன் மூலம் வானிலை முன்கணிப்பு தகவல்கள் பெறுவதற்கான வசதி அதிகளவில் உள்ளது என புனெ ஐஐடிஎம் தெரிவித்துள்ளது
14. ஆன்லைன் திட்டத்தில் 226 புதிய படிப்புகளை சென்னை ஐ.ஐ.டி அறிமுகம் செய்துள்ளது
15. ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கான
ஒதுக்கீட்டில் கூடுதலாக மேலும் 5 ஆயிரம் இந்தியர்களுக்கு
சவுதி அரசு அனுமதி அளித்துள்ளது