உலக செய்திகள்
- நீரிலும், வானிலும் செல்லும் உலகின் மிகப்பெரிய போர் விமானம் ஏ.ஜி.600 சீனாவில் பயணத்தை தொடங்கியது.
- சீனாவில் 3 ஆண்டுகளில் 13,000 இணையதளங்கள் மூடல்.
- தென்கொரியாவில் தொழிலாளர்களின் பணிநேரம் 68மணி நேரத்தில் இருந்து 52மணிநேரமாகக் குறைப்பு
- ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 10 செயற்கைக் கோள்களுடன் தனது மறு சுழற்சி செய்யப்பட்ட ஃபால்கன் 9 ராக்கெட்டை இன்று விண்ணுக்கு அனுப்பியது.
- 15கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல்வாழ் உயிரினம் பாறைப்படிமமாக கண்டுபிடிப்பு
தேசிய செய்திகள்
- டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாவது கட்ட ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
- நாட்டிலேயே முதன்முறையாக ஏ.சி.வசதியுடன் கூடிய புறநகர் ரயில் மும்பையில் இயக்கம்
- டெல்லி மெட்ரோ ரயிலின் மெஜந்தா வழித்தட சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைக்கிறார்.
- அண்டை நாடுகளுடன் வர்த்தகத்தை எளிதாக்க 2000 கிலோ மீட்டருக்கு நெடுஞ்சாலை: நிதின்கட்கரி
- நாடாளுமன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 9 கோடி நிதி ஒதுக்கீடு
- லிம்கா உலக சாதனைக்கான முயற்சி – கிறிஸ்துமஸ் தாத்தாவின் முகத்தை படைத்து புதிய சாதனை
வர்த்தக செய்திகள்
- பணமதிப்பு நீக்கத்துக்கு பின்னர் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை5 சதவீதம் அதிகரித்திருப்பதாக நிதித்துறை இணையமைச்சர் “ஷிவ் பிரதாப் சுக்லா” தெரிவித்துள்ளார்.
- இந்தியாவின் முதலாவது குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர்டெக்கான் தனது சேவையை 10 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியுள்ளது.
- இந்தியாவில் தற்போது வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறைந்துள்ள காரணத்தால் கல்வி கடன் பிரிவில் இருக்கும் வாராக்கடன் அளவு கடந்த இரண்டு ஆண்டுகளில் 47 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- உலகளவில் மொபைல் டேட்டா பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் அதிகளவு மொபைல் டேட்டா பயன்படுத்திய நாடாக இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- ICC 20 ஓவர் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி இரண்டாமிடத்துக்கு முன்னேற்றம்
- இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி. இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நியமனங்கள்
- இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சராக ஜெய்ராம் தாக்கூர் தேர்வு
ஒப்பந்தங்கள்
- பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துடன் சத்தீஸ்கர் அரசு இணைந்து 671 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை விமானப்படை, ராணுவம் வாங்க உள்ளது.
முக்கிய தினங்கள்
- டிசம்பர் 25: குரு கோவிந்த் சிங்கின் 350-வது பிறந்த நாள்
- டிசம்பர் 25: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93ஆவது பிறந்த நாள்