உலக செய்திகள்
- கொழுப்புவில்(இலங்கை) 2018 ஜனவரி 1ம் தேதி முதல் பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
- ஐ.நா வின் மனித உரிமை விசாரணை அதிகாரி ‘யாங்ஹீ லீ’ தங்கள் நாட்டுக்குள் நுழைய மியான்மர் அரசு தடை விதித்துள்ளது
- ஜெருசலமை தலைநகரமாக அறிவிப்பது தொடர்பான பொது வாக்கெடுப்பு ஐ.நாவில் இன்று நடைபெறுகிறது
- 2017ம் ஆண்டிற்கான மோசமான பாஸ்வர்ட் பட்டியலில் 12345678 மற்றும் 12345 ஆகியவை 2, 3வது இடத்தில் உள்ளது. qwerty, starwars, admin, welcome, login ஆகியவையும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது
- ஜப்பானில் 60க்கும் மேற்பட்ட வட கொரிய பள்ளிகள் இயங்கி வருகிறது
- பிரான்ஸில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி தொடர்பான உரிமைகளை புதுப்பிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
தேசிய செய்திகள்
- புல் இனத்தை சேர்ந்த மூங்கிலை மரங்கள் பட்டியலில் இருந்து நீக்கும் புதிய சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
- இந்தியாவில் 2015-2016 ஆண்டின் மதிப்பீட்டு கணக்குப்படி ரூ.1 கோடிக்கு அதிகமாக ஆண்டு வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை5 சதவீதம் அதிகரித்துள்ளது என்று வருமான வரி இலாகா தெரிவித்துள்ளது
- ‘ராஜேஸ்வா கியான் மாநாடு’ 2 நாட்கள் டெல்லியில் நடைபெற்றது இதில் அடுத்த ஆண்டு முதல் வருமான வரி மதிப்பீட்டில் புதிய முறை அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
- புதுசேரி ராஜுவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ‘தாயின் தூய்மையான அன்பு திட்டம்’ துவக்கி வைக்கப்பட்டுள்ளது
- நிலம், சுரங்க மாஃபியாக்களுக்கு எதிராக ‘திட்டமிடப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்ட மசோதா உத்திர பிரதேச சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது
- இராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைக்காக மத்திய அரசு கையகப்படுத்தும் அசையா சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதை முறைப்படுத்தும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது
வர்த்தக செய்திகள்
- பொருளாதார சீர்திருத்தங்களால் சீனாவை விட இந்தியாவில் ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது என சர்வதேச நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது
- டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தின் செல்போன் சேவையை ஏற்று நடத்த ஏர்டெல் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது
- இந்தியாவில் ஐபோன் மாடல்களின் விலை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது
- ஜனவரி 1, 2018 முதல் இந்தியாவில் ஹூண்டாய் கார் விலை 2 சதவீதம் அதிகரித்துள்ளது
- சேவை தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட அனைத்து சேவையும் ஆதாருடன் இணைத்து செயல்படுத்த பிஎப் ஆணையம் திட்டமிட்டுள்ளது
விருதுகள்
- தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் ரவி குமார், தங்கம்(10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில்) வென்றுள்ளார்
விளையாட்டு செய்திகள்
- 2017ம் ஆண்டுக்கான விலை மதிப்புமிக்க பிரபலமானவர்கள் பட்டியலில் விராட்கோலி முதலிடத்தில் உள்ளார்
- 2018-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 11வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜனவரி 27 மற்றும் 28ல் நடைபெறுகிறது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது
புதிய நியமனம்
- தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தலைவராக ‘யு.டி சால்வி’ (நீதிபதி) நியமிக்கப்பட்டுள்ளார்
- தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின உறுப்பினராக ‘உமேஷ் தத்தாத்ரேய சால்வி’ நேற்று பொறுப்பேற்றார்
- புதுச்சேரி அரசு செயலராக அன்பரசு நியமிக்கபட்டுள்ளார்