------------------------------------------------------
TNPSC Current Affairs 2017
29.08.2017
------------------------------------------------------
உலக செய்திகள்
1.
சீன இராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லீ ஜுவோசெங் நியமிக்கப்பட்டார்.
2.
கென்யாவில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
3.
சீனாவில் தேசிய கீதத்தை எங்கு பாடவேண்டும் எவ்வாறு பாட வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை உள்ளடக்கிய புதிய தேசிய கீத சட்டத்தை சீன அரசு அறிமுகம் செய்துள்ளது.
4.
உலக அளவில் செல்வாக்கு நிறைந்த நாடுகளின் பட்டியலில் கனடா முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 7வது இடத்தை பிடித்துள்ளது.
5.
கனடாவில் டோஸ்ட மாஸ்டர்ஸ் இண்டர்நேஷனல் என்ற அமைப்பின் சார்பாக நடைபெற்ற சர்வதேசப் பேச்சுப் போட்டியில் இந்திய வம்சாவழியை சேர்ந்த மனோஜ் வாசுதேவன் தங்கப் பதக்கம் வென்றார்.
6.
சீனாவின் பீஜிங் நகரில் உலக ரோபோ கண்காட்சி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட ரோபோக்கள் கண்காட்சிக்கென வைக்கப்பட்டது.
7.
லண்டன் நகரில் நடைபெற்ற மென்ஸா ஐ.கி.யூ(அறிவுத் திறன்) போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லிடியா செபஸ்டியன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
8.
அகஸ்ட் 29(இன்று) சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம்.
தேசிய செய்திகள்
9.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி.சி – 39 ராக்கெட், ஆகஸ்ட் 31ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.
10. நாட்டில் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்ததாக பிரதமர் நரேந்திர தெரிவித்துள்ளார்
11. கரூர் மாவட்டம் மாயனூர் முதல் காவிரி ஆற்றுப்பகுதி வரை மணல் அள்ள விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிப்பு செய்து உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
12. இரயில்வேயில் கடைநிலை ஊழியர்களை அதிகாரிகள் தங்கள் வீட்டு வேலைக்கு பயன்படுத்த கூடாது என்று இரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் லோஹானி தெரிவித்துள்ளார்.
13. மத்திய அரசு தேசிய தகவலியல் மையத்தின் மூலம் @gov.in என்ற டொமைனில் இருந்து மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான மின்னஞ்சல் ஐ.டி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
14. தமிழகத்தில் ஆடித் திருவிழா போல, தெலுங்கான மாநிலத்தில் பதுகம்மா பண்டிகை கொண்டாடப்படுகிறது.
15. உலகின் மிகப் பெரிய சமையல் கூடம் - (இந்தியா) பஞ்சாப் மாநிலத்தின் தலைநகர் அம்ரித்சரில் உள்ள ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் என்ற கோயிலில் உள்ளது. இந்த கோயிலில் தங்க தகடுகள் பதிக்கப்பட்டுள்ளதால் “பொற்கோயில்” என்று அழைக்கப்படுகிறது.
16. 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கங்களை பெற்ற தந்த ஹாக்கி வீரர் தியான் சந்த் அவர்களின் பிறந்த நாளான இன்று (ஆகஸ்ட் 29 ) தேசிய விளையாட்டு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
விளையாட்டு செய்திகள்
17. அரைஸ் ஸ்டில் - தமிழ்நாடு விளையாட்டு பத்திரிக்கையாளர் சங்கம் (டிஎன்எஸ்ஜேஏ) சார்பில் தழிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், தடகள வீரர் லட்சுமணன் ஆகியோருக்கு 2017ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது வழங்கப்பட்டது.
18. ஐபிஉல் தொடரின் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
19. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா, செக் குடியரசு பிளிஸ்கோ ஆகியோர் வெற்றி பெற்றனர்.
20. உலக குத்துச் சண்டை போட்டியில் 2வது சுற்றில் இந்திய வீரார்கள் அமித் பான்கல், கவுரவ் பிதுரி ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
21. பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைபந்து போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் ஆர்.சி.எஃப். புணே மற்றும் இந்திய ராணுவ அணிகள் வெற்றி பெற்றனர்.
22. திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
23. இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடர் - இலங்கை அணியை தொடர்ச்சியாக 8 முறை வீழ்த்தி இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது.
வர்த்தக செய்திகள்
24. நைஜீரியா நாட்டிற்கு 593 மில்லியன் டாலர் மதிப்பில் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
25. பணியாளர்களுக்கு அளிக்கப்படும் கூடுதல் பணப் பயன்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும் என்று மத்திய உற்பத்தி மற்றும் சுங்கத் துறை (சிபிஇசி) தெரிவித்துள்ளது.
26. சொகுசு கார்களுக்கான கூடுதல் வரியை 15 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
27. உலகிலேயே முதன் முறையாக வைர முன் - பேர சந்தை – மும்பையில் எம்.எம்.டி.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து ஐ.சி.இ.எக்ஸ் சந்தையை நேற்று(28.08.2017) துவக்கியது
28. ரூ.50000 க்கும் மேல் நகை வாங்குபவர்களுக்கு பான் கார்ட் கட்டாயமாக்கப்பட்ட நிலையில் தற்போது எந்த நகை வாங்குவதற்கும் பாண் கார்ட் கட்டாயமாக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக நிதி குறித்த கட்டுப்படிகளை விதிக்கும் குழு அறிவித்துள்ளது.
29.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெனோ நிறுவனம் நடப்பு ஆண்டில் “கேப்சர்” என்று புதிய வகை சொகுசுக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.